Otteri Selvakumar Tamil poems by ஓட்டேரி செல்வகுமார் (book reader for pc .txt) 📖
- Author: ஓட்டேரி செல்வகுமார்
Book online «Otteri Selvakumar Tamil poems by ஓட்டேரி செல்வகுமார் (book reader for pc .txt) 📖». Author ஓட்டேரி செல்வகுமார்
வீட்டு சுவற்றில்
புத்தம் புதியதாய்
தாங்கி கொண்டு இருஇந்தது
அப்பா இராம மூர்த்யீன் படம் ...
2001 மே 12 ல் அப்பா போய் விட்டார்
இருபினும்
மாசம் தவறாமல்
அம்மாவாசை படையல் போட்டு ...
அம்மாவும் தம்பி லோகநாதனும்
மொட்டை மாடியில்
காக்கைக்கு விருந்து வைத்து
அப்பாவை அழைத்து விடுவார்கள்
காககாய் வடிவில்....
பறந்து வரும் காக்கைக்கு
அன்று மொட்டை மாடியில்
நல்ல விருந்துதான்
சில சமையும் பல காக்கைகள்
பறந்து வரும் "இதில் எது அப்பா ..."?
என கேட்டால்
அம்மாவுக்கு கோபம் வரும்
நல்லவேளை
அப்பா இல்லாத
அம்மா தம்பின் உள்ல குறையை
காக்கைகள் கவனித்து கொள்கிறது
அனுதினம் காலை உணவுடன்
அம்மாவாசை மதிய விருந்துடன்
இனிதாக ...
ஒரு வகையில் அப்பா இன்றும்
உய்ர்ருடன் இருகிறார்
காக்கை வடிவில் கருப்பாக
சற்று மெளனமாக ..
மிக்க நலமாக ...
ஓவியம்
காதல் சொன்ன போது
கண்களால் செய்கை
காண்பித்து ....
இதயத்தால் அடி கடி
பேசி பழகி
உன்னையே ...
கனவு கண்டு
உன்னை நினைத்து
உண்ணாமல் தின்னாமல்
சரிவர உறங்காமல்
காத்து இருந்து இருந்து
உன்னிடம் ஒரு நாள்
உன்னை காதல் செய்கிறென்
என்று நான் சொன்ன போது
"போயா ...போய் வேலைய பாரு "
என்று முகத்தில் கரி பூசி
கரும்புள்ளி செம்புள்ளி
என் மனசில் குத்தி
நட மாடும் நடை பெனமா
ஊர்வலம் உலா வரவிட்ட நீ
வாழ்க என வாழ்த்த
மனம் இல்லை
வசை பாட பிடிக்கவில்லை
வருந்துகிறென்
உனக்காக கொஞ்சம்
எனக்க கொஞ்சம்
அதை தவிர வேறு எதுவும்
செய்ய முடியலை என்னால்....
காரணம்
நான் உன்னை காதல் செய்தது
நிஜம் ...
நிஜம் மரித்து போனதால்
உடம்பு + உயிர் இருந்தும்
பைத்தியமா இருக்கேன்
உன் மீது அல்ல
என் "காதல்" மீது ...
Imprint
Text: ஓட்டேரி செல்வகுமார்
Images: ஓட்டேரி செல்வகுமார்
Editing: ஓட்டேரி செல்வகுமார்
Publication Date: 10-07-2018
All Rights Reserved
Dedication:
1984 இல் இருந்து தமிழில் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன் என பல மொழிகளில் நான் எழுதிக் கொண்டிருந்தாலும் தமிழ் எனது தாய் மொழி என்பதால் நான் எழுதுகிறேன் .... எழுதுகிறேன் என்றால் மிகையல்ல தமிழில் எழுதுவது என்பது ஒரு சுகமான விஷயம் அந்த ரீதியில் நான் 2013-14 வருடங்களில் இணையதளத்தில் எழுதினேன் பதிவுகளாக அப்படியே இருந்தது உடனே அதை பதிவிறக்கம் செய்து உங்களுக்கு இந்த கவிதைத் தொகுப்பாக இதைப் படித்து ரசித்து இன்புறும்படி வேண்டுகிறேன்... அதுதான் இந்த "யம்மா யம்மா யம்மா " உங்கள் முன் கவிதை தொகுப்பாக இது எனது 6 வது கவிதை தொகுப்பு இந்தக் கவிதைத் தொகுப்பு என் அப்பா அம்மா மற்றும் என் தாத்தா முனுசாமி மற்றும் பாட்டி தனலட்சுமி உள்ளிட்டவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்... அன்புடன் ஓட்டேரி செல்வகுமார்
Comments (0)