Love Hearts by Kalai Selvi Arivalagan (smallest ebook reader .TXT) 📖
- Author: Kalai Selvi Arivalagan
Book online «Love Hearts by Kalai Selvi Arivalagan (smallest ebook reader .TXT) 📖». Author Kalai Selvi Arivalagan
என் நினைவினில்...
கண்கள் மூடியே
சுகமான உறக்கத்தில்
நானிருந்தாலும் என்னுள்
விழித்திருக்கும் உன்னைப் பற்றிய
ஞாபகங்கள் மென்மையாய்
கைகளுக்குள்அடங்கிடும்
என் ஆசை தலையணையாய்
உன் கைகளுக்குள்
நான் வரும் நேரமே
மற்றுமொரு வசந்தமாகும்!
எழுத்துக்களாய்....
இளமை எண்ணங்களின் பிரதிபலிப்பாய்
உன் எழுத்துகள்.
என் முன்னே
உன்னைக் கொண்டு வரும்
உன் கையெழுத்துக்கும்
ஒரு உருவம் கொடுத்து பார்க்கும்
என் பொழுதுகளுடன்
போட்டி போடுமா
என் கணிணி!
காதல் மணித்துளிகள்
நொடிகள் விநாடிகளாய்
மாறிட ஒலிக்கும்
டிக் டிக் எனும் ஓசையில்
டப் டப் என்று
துடிக்கும் என்னிதயத்தின்
ஓசையினில் மறைந்திருக்கும்
தனிமையின் வலிதனை
நீ அறிவாயா - இல்லை
அறிந்தும் அறியாதது போல்
மீண்டும் நடிக்கின்றாயா?
தொடும் தூரத்தில்....
தொடு வானம் இப்போது
தொடும் தூரத்தில் தான்!
கனவுகள் யாவும்
உனக்குள் எனக்கு மட்டும்!
உனக்காக மட்டும்
உன் நினைவுகளில்
ஒரு கவிதையாக
மாலை நேரத்து குளிராக
என் உணர்வுகளில் உயிராக
இன்று புதியதாக
ஒரு கவிதை பிறந்தது
என் கனவு சிரிப்பினில்.
புத்தாண்டு வாழ்த்துகள்
புதியதாய் சில கனவுகள்
புத்துணர்வு தந்திட
இனிமையாய் மனதினில்
உன்னைப்பற்றிய எண்ணங்கள்!
உணர்வுகளில் நிறைந்து நிற்கும்
இளமையுடன் இனிமையும்
எங்கும் நிறைந்திட
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
பொங்கிடும் பொங்கலாக....
பால் துளிகளின் வெண்மையாக
வெல்லத்தின் இனிமையாக
உன் பெயர் நாவினில் இனிக்க
இன்று மனதினில் பொங்கிடும்
காதல் பொங்கலுக்கு
தித்திக்கும் இனிப்பாக நீ!
உன் இதயத்தினில் தளும்பிடும்
பொங்கலின் நெய் ருசியாக நான்!
வெதுவெதுப்பாக படரும்
காலை நேர ஒளியினில்
மற்றுமொரு பொங்கலோ பொங்கல்!
Imprint
Publication Date: 12-14-2013
All Rights Reserved
Dedication:
உன்னைப் பற்றிய எண்ணங்களே
The unity of form and content is what distinguishes poetry from other areas of creativity. However, this is precisely what titanic work implies.
Comments (0)